மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை முதல் மலையகப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை இன்று நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது தொடர்பான தீர்மானத்தை அந்தந்த கல்வி வலயங்களின் அதிகாரிகள் மேற்கொள்ள முடியும் எனவும் மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.